Monday, February 20, 2012

அகதி


தாயை  விட்டுத்  தள்ளி  வைத்தான்
என் சிறகுகளைக்  கிள்ளி  வைத்தான்
என் விடுதலைக்குக்  கொள்ளி  வைத்தான்
என் உரிமைக்குப்  புள்ளி  வைத்தான்
உணவு  என்ற  பெயரிலே,உப்பின்றி  அள்ளி  வைத்தான்
வீடெனும்  சொர்க்கம்  விடுத்து,ஓர்  விடுதியில் அகதியானேன்!!
எனது  பெயர் மாணவன்......   
                                                                                      -ராகவன்(த்வஜன்)

Sunday, February 19, 2012

செவியுண்டோ?


உணர்வில்லாமல்  உடைத்தேரியும்  உளியே!
சில்லாகச்  சிதறிக்  கதறும்  என் குரலைக் கேளாயோ?
கசிந்திடத்தான்  கண்ணீரில்லை
உயிரில்லாப்  பாறை  என்றது  ஓர்  உயிர்
வலியுண்டு  என்று  இயம்புகிறேன்  இன்று!!!

உனை  வருத்தும்  நாள்  குறித்து ,நான்  வருந்தா  நாளில்லை
வலியின்  கொடுமைக்கு  நானில்லை  விதிவிலக்கு
என்  வாழ்நாளின்  குரல் கேட்கும் செவியெங்கே?
சிதைகின்றேன்  நான்!உன்  தலைவிதியைச்  செதுக்கித்தான்!!!
                                                                                                                    -ராகவன்(த்வஜன்)

Thursday, February 02, 2012

நீ விதிவிலக்கல்ல!!!


கரையாத கல்லுப்பாய் இதயத்தின் துக்கம்
உறைந்து போன பனித்துகளாய் உள்ளத்தைக் குத்தும்          
கார்மெகக் கண்ணிரண்டும் கண்ணீரில் ததும்ப
விழிமழையில் துக்கத்தைக் கரைத்திடடா தோழா!!

அடியெடுத்து வைக்கயிலே அழுகை ஓலம் கேட்டிடுதே
‘அழுதிட வா'  என்றே உன் இதயத்தைக் கூப்பிடுதே
கண்ணீரில் துக்கங்கள் கரைந்திடுமோ என்றென்ன
இமயம் போல் சுமயொன்று இமைகளிலே இறங்குதடா!!

சொந்தங்களும் சுற்றாரும் தலைவிரித்து அழுதிடவே
மூலையிலே உன் மௌனம் அதைத்தாண்டிக் கதறுதடா
"நீ என்ன விதிவிலக்கா?" என்று பலர் உனைக்கேட்க
இமைகளிலே நீ அடைத்த இருத்துளிநீர் பேசுதடா!!

காடுவரை சென்றிடவே உன் மனபாரம் தடைவித்தால்
சுடர் வைக்கத் தீப்பந்தம் கைகளில் யார் எந்திடுவார்?
இறுநொடி நீ இமைமூடி,உன் மனதைத் தேற்றிக்கொள்
விதிவிலக்காய் இல்லாமல்,தீப்பந்தம் எந்தச்செல்!!!
                                                                                                
(Firstly,these lines are not intentionally written,It was an emotional outbreak.Iwrote this for my friend’s Father to get him back going on his life,when his Beloved Mother passed away…..)
                                                                                  -ராகவன்(த்வஜன்)



புதியதோர் உறவு...

சிறு பார்வையிலே பல வருடப் பழக்கம் தந்தாய்
ஒரு வார்த்தையிலே வந்தென்னை வருடிவிட்டாய்
உன் புன்னாகியில் புதியதொரு நெருக்கம் தந்து
என்னுள் ஒரு புதிராய் நீ அமைந்துவிட்டாய்!!

நீ போகும்வரை எனை நின்று பார்க்கவைத்தாய்
என் வழக்கம் நீ வந்து மாற்றிவைத்தாய்
உந்தன் ஆதிக்கம் அது என்னை மாதிரிடாவே
உன்னை நினைக்கையிலே,உதடுகள் தானாய் சிரிக்கிறதே!!!

கண்ணில் தெரிந்திடவே இது காதல் இல்லையடி
நட்பைத் தாண்டியொரு புது பயணம் தொடருதடி!!
இது எங்கே சென்றிடுமோ எனக்கே தெரியவில்லை
உன்னைக் கண்ட நொடி,என் வாழ்வில் நகரவில்லை!!!

நம்மிடையே சிறியதொரு எடைவெளி உருவாக
கண்டேனே  உன்னில் பல மாற்றங்கள் புதிதாக
உன் ஆழ்மாநத்தின் அலைகளை நான் ஆராய
சிதறியாதே என்னிதயம் தூளாக!!!

உன் சிரிப்பொலி கேட்டிடவே நான் கோமாளி ஆனேனே
உந்தன் சிரிப்பினிலே அன்று எமர்ந்து போனேனே!!
இன்னும் எதற்காக என்னுடன் பழகுகிறாய்
ஒரு ஏவல் நாய்ப் போல,நான் உன் காலைச் சுற்றிடவா?

உன் உருவம் தங்கியதே,எனது  உள்ளக் கண்ணாடி
அது கற்கள் தாங்கிவிடும் உன் சொற்கள் தாங்கிடுமோ?
கண்ணீர் விடுகையிலே,என் கண்கள் கரைந்தனவே!
என் கைகள்  இப்போதும்  உன்னைத் தேடிடுதே!!!
                                                                                    -ராகவன்(த்வஜன்)